Video: வீணை வாசித்து அசத்திய வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா! - கம்பன் விழா
திருப்பத்தூர்:வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 30வது ஆண்டு முத்தமிழ் இலக்கிய பெருவிழா நேற்று (பிப்.17) முதல் தொடங்கி நாளை 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள செங்குந்தர் மண்டப வளாகத்தில் நேற்று (பிப்.17) விழா குழுவினர்கள் குத்துவிளக்கு ஏற்றி முத்தமிழ் விழாவை துவக்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. பின்னர் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையில் தமிழிசை அரங்கம் நடைபெறுகிறது. இதில் கோட்டாச்சியர் பிரேமலதா வீணை வாசித்தும் பாடல் பாடியும் அசத்தினர். சனிக்கிழமை(இன்று) சுழலும் சொல்லரங்கம், அருளரங்கம், பாராட்டரங்கம், சொல்லரங்கம், பொழிவரங்கம், கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இறுதி நாளான நாளை உள்ளொளி அரங்கம், கவிதை அரங்கம், கலையரங்கம், குறளரங்கம், இசையரங்கம், நெகிழ்வரங்கம், பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், கவிஞர், புரவலர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேச்சாளர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.