கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு.. - பரமபத வாசல்
Published : Dec 23, 2023, 10:50 AM IST
தருமபுரி: கோட்டை பரவாசுதேவர் சுவாமி கோயிலில் 'வைகுண்ட ஏகாதசி'-யை முன்னிட்டு இன்று (டிச.23) சொர்க்கவாசல் திறக்கப்பட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரி கோட்டை பகுதியில் வர மகாலட்சுமி சமேத பரவாசுதேவ சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (டிச.23) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரவாசுதேவ சுவாமி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பரவாசுதேவ சுவாமிக்கு அதிகாலை 2 மணி அளவில் இருந்து அபிஷேகங்கள் நடைபெற்று, அதிகாலை 4.30 மணி அளவில் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு லட்டு மற்றும் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், தருமபுரி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர். இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.