ஆடிப்பெருக்கு விழா 2022: கனகநாச்சியம்மன் கோயிலில் குவிந்த தமிழ், தெலுங்கு பக்தர்கள்! - Kanaganachiyamman temple
வாணியம்பாடி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கனகநாச்சியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, இரு மாநில பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து பாலாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையினைத் தாண்டி நடந்துசென்று கனகநாச்சியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் என ஏராளமானோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST