கோயில் திருவிழாவில் மாணவிகள் கும்மிபாட்டு! - Traditional
கோவில்பட்டியில் அமைந்துள்ள வேலாயுதபுரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இத்திருக்கோயில், திருவிழாவில் காளியம்மனை வரவேற்கும் விதமாக பெண்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே விரதம் இருந்து பாரம்பரிய மிக்க கும்மி பாட்டுக்கு நடனம் ஆடி அம்மனை வரவேற்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த இத்திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பாரம்பரியமிக்க கும்மி பாட்டுக்கு நடனமாடி அம்மனை வரவேற்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST