குற்றாலத்தில் குவிந்த கூட்டம் - நீண்ட வரிசையில் காத்திருந்து குளியல் - நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள்
தென்காசி:குற்றால அருவிகளில் குவிந்த கூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குறைந்த அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் விழும் குறைந்த அளவு தண்ணீரில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் இட்டனர். அதேபோல், ஐந்தருவியின் 3 கிளை அருவியில் தற்போது தண்ணீர் கொட்டி வரும் சூழலில், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருகிரது. இதன் காரணமாக போலீசார் சுற்றுலாப் பயணிகளை வரிசையில் நிறுத்தி குளிக்க அனுமதித்து வருகின்றனர்.
மேலும், விடுமுறை தினத்தைக் கொண்டாட இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் சூழலில், தற்போது ராஜபாளையம் பட்டாளியன் பிரிவைச் சேர்ந்த ஒரு கம்பெனியினர் குற்றாலம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடலில் பச்சை குத்தி லியோவின் ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டம்!