ooty flower show: ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி 3 ஆவது நாளாக கொண்டாட்டம்!
நீலகிரி: உதகையில் ஆண்டு தோறும் கோடை சீசனை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல போட்டிகள், கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் உதகை தாவரவியல் பூங்காவில் 125 ஆவது மலர் கண்காட்சி கடந்த 19ஆம் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
உதகை தாவரவியல் பூங்காவில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தாவரவியல் பூங்கா களைகட்டியது. மலர்க் கண்காட்சி தொடங்கி 3 நாட்கள் ஆகிய நிலையில் வரும் 23ஆம் தேதியுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.
மேலும் தாவரவியல் பூங்காவில் பூக்களால் உருவாக்கப்பட்ட மயில் மற்றும் வரையாடு போன்ற சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளை முன்னிட்டு தாவிரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் செல்ஃபி, புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் விடுமுறையை களித்தனர்.