தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் குபீர் சம்பவம்

ETV Bharat / videos

கார் நின்ற இடத்தை விட்டு விட்டு சாலை அமைத்த மாநகராட்சி… திருப்பூரில் குபீர் சம்பவம்!! - திருப்பூர் மாவட்ட செய்தி

By

Published : Aug 14, 2023, 4:35 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பழைய தார் சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் தார் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) இரவு தார் சாலை சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரு வேறு இடங்களில் கார்கள் நின்றிருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தாமல் கார்கள் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டுவிட்டு மற்ற இடங்களில் தார் சாலை போடப்பட்டு உள்ளது. 

சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சாலை சீரமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இது போன்று கார்கள் நிற்பதை காரணம் காட்டி ஒப்பந்ததாரர் இடைவெளி விட்டு விட்டு தார் சாலை போட்டு சென்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியும் நகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனை மாநகராட்சி சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்

இதையும் படிங்க: இனி டைலர் தேவையில்லை.. திருப்பூரில் புதிய மெஷின் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details