செல்போன் பேசியபடி பேருந்தை ஓட்டிய அரசு ஓட்டுநர் - செல்போன் பேசியபடி பேருந்து இயக்கும் வீடியோ
திருப்பத்தூர் அருகே சமீபத்தில் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆகையால், சாலை விதிகளை மதித்து கவனமாக சாலையில் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பல விழிப்புணர்வுகளையும், உத்தரவுகளையும் போட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தினசரி எண்ணிலடங்கா விபத்துகளும், விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் நிகழந்து வருகிறது.
இந்த நிலையில், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு நகரப் பேருந்தில் அரசின் விதிமுறைகளை மீறி ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசிய படி பேருந்து ஓட்டி செல்கிறார். மேலும், அவருக்கு பிடித்த நொறுக்குத் தீனிகளையும் உண்டு கொண்டு மிகக் வனக்குறைவாக பேருந்தை இயக்கி வந்ததாக அப்பேருந்தில் பயணம் செய்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தை இயக்கினால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாகி விடும் என்றும், எனவே, இவ்வாறு கவனக்குறைவான முறையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மீது அரசு போக்குவரத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.