திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல் - today news
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக மணிமேகலை ஆனந்தகுமார் பதவி வகித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன்களான சின்னத்தம்பி மற்றும் கர்ணன் ஆகிய இருவரும் ஆத்துமேடு பகுதியில் சுமார் 2.5 ஏக்கர் அளவிலான நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நிலத்தை வீட்டுமனை போடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவரிடம் அங்கீகாரம் கேட்டு உள்ளனர்.
மேலும், சின்னதம்பி மற்றும் கர்ணன் ஆகியோர் அலுவலகத்தில் முறையான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் அந்த இடம் நீர் பிடிப்பு பகுதி என்பதால் அங்கீகாரம் கிடைப்பது மிகவும் கடினம் என ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கூறி உள்ளார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி மற்றும் கர்ணன் இருவரும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான ஆனந்தகுமாரை ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக தாக்கி, அவரது சட்டையைக் கிழித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கந்திலி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பட்டியலின பெண்ணை தாக்கிய மாற்று சமூகத்தினர் - காவல் துறை நடவடிக்கை என்ன?