தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 11ம் திருவிழா தெப்ப உற்சவம்

ETV Bharat / videos

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

By

Published : Mar 8, 2023, 3:33 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் உலப்புகழ் பெற்றதாகும். இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு நடைபெறும் விசாகம், தைபூசம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி போன்ற விஷேசங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற கூடிய மாசி திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு மாசித்திருவிழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா  சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதன்பின் தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தில் 11சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details