ஆடி வெள்ளி; திருவண்ணாமலை ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!
திருவண்ணாமலையில்புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயிலில் ஆடி மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு குடும்பத்துடன் ஒன்று கூடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோழி மற்றும் கிடா வெட்டி பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுவது வழக்கம்.
அதன்படி ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 28) அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் மன்னார் சாமி திருக்கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் தங்களது குடும்பத்துடனும், உறவினர்களுடனும் ஒன்று கூடி, பொங்கல் வைத்து ஸ்ரீ பச்சையம்மன் மன்னார்சாமிக்கு கோழி மற்றும் கிடா வெட்டி படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வந்தனர். ஆண்டுக்கு ஒரு முறை ஒன்று கூடி தங்களது குல தெய்வத்துக்கு கிடா வெட்டி குழந்தைகளுக்கு மொட்டை அடித்து மற்றும் காதுகுத்தி குடும்பத்துடனும், உறவினர்களுடனும் சேர்ந்து ஸ்ரீ பச்சையம்மனை மன்னார்சாமி வழிபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தஞ்சை சார்ங்கபாணி கோயில் உதய கருட சேவை திருவீதி உலா தொடக்கம்!