தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை

ETV Bharat / videos

பேருந்தின் உள்ளே வரசொன்ன நடத்துநரை ஆபாச வார்த்தையால் பேசிய பள்ளி மாணவன்! - sengam bus incident

By

Published : Jul 15, 2023, 4:08 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையின் சார்பில் பள்ளி நேரத்திற்கு செங்கம் பகுதியில் இருந்து பள்ளிப்பட்டு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. செங்கத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதி வரையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். 

பேருந்து காலியாக இருந்தாலும் உள்ளே வந்து அமராமல் படியில் நின்று காலை, சாலையில் கீழே தேய்த்தபடி கூச்சலிட்டு மாணவர்கள் வருவதால் பேருந்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் ஓட்டுநர் நடத்துநருக்கு விபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபத்தை உனராமல் படியில் நின்றபடி பயணம் செய்யும் மாணவனை நடத்துநர் பேருந்துக்கு உள்ளே வரும்படி கூறினால் அவர்களை தாகாத வார்த்தையால் பேசி மிரட்டும் தொனியில் நடந்து கொள்கின்றனர். 

பள்ளி மாணவர்கள் பலவிதமாக பிரச்சனைகளை மேற்கொள்வது குறித்து பேருந்து நடத்துநர் செங்கம் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மாணவர்கள் தங்களது படிப்பு பற்றியும் விபத்து பற்றியும் அக்கறை இல்லாமல் தான் போன போக்கில் செல்பவர்களை கட்டுக்குள் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறையும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details