திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்த இசைஞானி..! - thiruvannamalai news
Published : Jan 1, 2024, 10:13 PM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், ஆங்கில் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று (ஜனவரி 1) அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோயில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இளையராஜா அண்ணாமலையாரை முட்டி போட்டு தலை வணங்கி கும்பிட்டார். மேலும், இளையராஜாவின், ரசிகர்கள் மற்றும் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.