திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவக்கம்.. வானவேடிக்கையில் ஜொலித்த அண்ணாமலையார் கோயில்! - Tiruvannamalai Annamalaiyar Temple
Published : Nov 18, 2023, 11:08 AM IST
திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். அப்படிப்பட்ட அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும், குறிப்பாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.
அதேபோல, இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று (நவ.17) காலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொங்கியது. கொடியேற்றத்தையடுத்து, நேற்று காலையில் முதல் நாள் கார்த்திகை தீபத் திருவிழா உற்சவம் தொடங்கியது.
இதனைத் தொடந்து, முதல் நாள் இரவான நேற்று விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனம் மற்றும் ஹம்ச வாகனத்தில் அண்ணாமலையார் கோயிலின் முன்பாக உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தளினர். பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகளின் மாடவீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வீதியுலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.