தமிழ்நாடு

tamil nadu

செல்லும் வழியில் நின்ற வாகன ஓட்டிகளை துரத்தியடித்த யானைகள்

ETV Bharat / videos

Elephant video: 'இது எங்க ஏரியா உள்ளே வராத' - செல்லும் வழியில் நின்ற வாகன ஓட்டிகளைத் துரத்தியடித்த யானைகள்

By

Published : May 7, 2023, 12:09 PM IST

நீலகிரி: கூடலூரில் இருந்து மைசூர், கேரளா செல்லும் சாலைகள் அடர்ந்த வனப்பகுதிகளுடன் இருப்பதால், அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் நாடுகாணி சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

இதனிடையே அங்குள்ள வனப்பகுதியில் இருந்து சாலையைக் கடக்க குட்டியுடன் தாய் யானை செல்லும் பொழுது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது யானை அவர்களை பார்த்து வேகமாகத் துரத்தியது. இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும் யானை துரத்துவதை சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்பு யானை வனப்பகுதிக்குள் சென்றது. 

இதில் குறிப்பாக யானைகள் வனப்பகுதியை கடக்கும் பகுதி எனப் பெயர்ப் பலகை வைக்கப்பட்ட இடத்தில், வாகன ஓட்டிகள் நின்றிருந்ததால் யானை துரத்தியதுபோல தெரிகிறது. இந்நிலையில் அந்தப் பெயர் பலகை வைக்கப்பட்ட இடத்தின் வழியாக சரியாக குட்டியுடன் தாய் யானை வனப்பகுதிக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details