தமிழ்நாடு

tamil nadu

கோயில் வெண்கல கலசம் திருட்டு

ETV Bharat / videos

கோயில் கோபுர கலசம் திருட்டு! - கோயில்

By

Published : Mar 5, 2023, 2:17 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ள பழமையான மெய்கண்ட விநாயகர் கோயில் பிரசித்தி பெற்றது. கடைசியாக இக்கோயிலுக்கு கடந்த 1989 ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த கோயிலில் பெரிய அளவில் பராமரிப்பு பணிகளும், கும்பாபிஷேகமும் நடைபெறவே இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இக்கோயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், கோயில் விமானத்தில் இருந்து வெண்கல கலசம் மற்றும் கோயிலில் இருந்த பெரிய பித்தளை குவளை ஆகியவற்றை திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார்  1 லட்சம் ரூபாய் வரை இருக்ககூடும் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. 

மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து கோயில் பரம்பரை அறங்காவலர் தண்டபாணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலசத்துடன் தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details