தேனியில் வண்ண மின்னொளிகளால் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்! - COLLECTOR OFFICE
தேனி:இந்தியா முழுவதும் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும், அரசு அலுவலகங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின், முகப்பு பகுதியில் மூவர்ண கொடியில் உள்ள வண்ணங்கள் வடிவில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது இது காண்போர் கண்ணை கவர்கின்றன. மேலும், இரவு நேரங்களில் மூவர்ண வடிவில், மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் அனைவரும் பார்த்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும், தேனியில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா கலந்து கொண்டு காவல்துறை அணிவகுப்புகளை ஏற்றுக்கொள்கிறார். இதைத்தொடர்ந்து நடைபெறும் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.