தேக்கடியில் 15ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது - தேனி மாவட்ட செய்தி
தேனி: தமிழ்நாடு -கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் "தேக்கடி 15ஆவது மலர் கண்காட்சி" கல்லறைக்கல் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 1) தொடங்குகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகளும், அலங்காரச் செடிகளும், தோட்டச் செடிகளும், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான நாற்றுகளும் வைக்கப்பட்டுள்ளன.
வேளான் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர்கண்காட்சி வரும் மே 14ஆம் தேதி வரை 44 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மேஜர் ஜெயந்த் மரணம்; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!