தமிழ்நாடு

tamil nadu

வீட்டில் பூத்த பிரம்ம கமலம் பூ..வியப்பில் ஆழ்ந்த குடும்பத்தினர் ! பூஜை செய்து வழிபாடு:

ETV Bharat / videos

ஆண்டுக்கு இருமுறை பூக்கும் பிரம்ம கமலம்.. ஓசூரில் பூஜை செய்து வழிபட்ட மக்கள்! - blossom

By

Published : Jul 15, 2023, 7:10 PM IST

கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த சூளகிரி விஐபி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது  வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அரியவகை பிரம்ம கமலம் பூ  இரவில் மட்டுமே மலர்ந்து 3 மணி நேரத்திற்குள் வாடும் தன்மை கொண்டது.

ஆனால்,  சீனிவாசன் வீட்டில் பராமரிக்கப்படும் பிரம்ம கமலம் செடிகளில் ஆண்டிற்கு இரண்டு முறை பூ பூக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பிரம்ம கமலம் பூக்கள் பூத்துக்குலுங்கி வாசனை வீசியது. இதனையடுத்து  சீனிவாசன் குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர். 

மேலும், சாமி வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்துவதாகச் சீனிவாசன் கூறினார். இதனையடுத்து அரியவகை பூவை அங்கம் பக்கத்தினர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பொதுவாகப் பிரம்ம கமலம் செடிகள் இமயமலையின் ஒரு சில இடங்களில் மட்டுமே அதிகளவு காணப்படும் .தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த செடிகள் வளர்க்கப் படுகிறது. இது குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

ABOUT THE AUTHOR

...view details