Video: சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்த சிறுவன்:3 கி.மீ. மகனுடன் ஓடி உற்சாகப்படுத்திய தாய்!
மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறையைச் சேர்ந்த ஹரிபாஸ்கர், கார்குழலி தம்பதியினர் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது 10 வயது மகன் அஸ்வின் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று மயிலாடுதுறையில் 3 கி.மீ தூரம் கைகளால் சிலம்பம் சுற்றியபடி ஸ்கேட்டிங் செய்து சாதனைப் புரிந்துள்ளார். சவாலான ஸ்கேட்டிங்கை ஒருபுறம் கவனித்துக்கொண்டு, மறுபுறம் மனதை ஒருநிலைப்படுத்தி சிலம்பத்தின் பல்வேறு வரிசைகளை செய்து காட்டியபடி சிறுவன் சென்றபோது மகன் சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கில் மகன் அஸ்வினை உற்சாகப்படுத்துவதற்காக அவரது தாய் சிறுவனுடன் ஸ்கேட்டிங் வேகத்திற்கு ஈடாக வேகமாக கைத்தட்டியபடியே ஓடி உற்சாகப்படுத்தி வந்தார். மேலும், ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஒன்பது நிமிடங்கள் 33 விநாடிகளில் ஸ்கேட்டிங் செய்தபடியே சிலம்பம் சுற்றி சிறுவன் சாதனைப் படைத்துள்ளார்.