தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை - பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி - Latest news about Thyagaraja Aradhana Festival

By

Published : Jan 29, 2023, 10:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

தஞ்சாவூர்:சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜர் (Sri Thyagaraja Swamy), திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ஆம் ஆண்டில் முக்தி அடைந்தவர். அனைத்தும் 'ராமபிரானே' என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கர்நாடக இசைப்பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. எனவே, கர்நாடக இசைப்பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டார். 

இதன் பொருட்டு இவரை நினைவுகூரும் வகையில் தஞ்சாவூரில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் நேற்று (ஜன.28) நடந்த தியாகராஜர் ஆராதனை விழாவில் (Thyagaraja Aradhana Festival) பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இசைக்கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இசைக் கலைஞர்கள் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், ஜெயந்தி கண்ணன், மீரா சம்பத், நடராஜன் வயலின் விக்னேஷ் கடம் ராமச்சந்திரன் மிருதங்கம் மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி பாடினர். பின்னர், தியாகராஜர் திருவுருவப் படத்திற்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. இதில், இசை ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details