தஞ்சாவூர் மாநகராட்சி திடலில் ஹாக்கி போட்டி - எல்.இ.டி திரையில் நேரடி ஒளிபரப்பு - pakistan
தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று (ஆகஸ்ட் 03) தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் இந்தியா, கொரியா, மலேசியா உள்ளிட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
இப்போட்டி குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி திடலில் எல்.இ.டி திரை மூலம் ஹாக்கி போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய எற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி நேற்று (ஆகஸ்ட் 03) நடைபெற்ற போட்டியினை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். மேலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 9ம் தேதி நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையெ ஆர்வம் அதிகமாக ஏற்பட்டு உள்ளது.