தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை: ‘ஒரு கிலோ 70 ரூபாய்’

ETV Bharat / videos

தென்காசியில் ரூ.70-க்கு கிலோ தக்காளி - மாவட்ட ஆட்சியர் அதிரடி திட்டம்! - sale of tomatoes in Tenkasi

By

Published : Jul 12, 2023, 10:51 PM IST

தென்காசி:தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் குறைந்த விலைக்குத் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தக்காளியின் விளை நம்ப முடியாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் வெளிச் சந்தைகளிலும் தக்காளியின் விளை அதிகரித்து காணப்படுகிறது. இதனைச் சரிசெய்யும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலமாகத் தக்காளியின் வரத்தை அதிகரித்து, உழவர் சந்தைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி தென்காசி உழவர் சந்தையில் தக்காளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். அதன்படி உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் குறைந்த விலைக்குத் தக்காளிகளை வாங்கி சென்று பயனடைந்தனர்.

மேலும் உழவர் சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகளின் வரத்துகளையும் அதன் விலைப் பட்டியல்களையும் மாவட்ட ஆட்சியர் வியாபாரிகளிடம் நேரடியாகக் கேட்டு அறிந்து ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெய பாரதி, மாலதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details