போடியில் 1 ரூபாய்க்கு டீ விற்பனை.. அலைமோதிய மக்கள் கூட்டம்! - bodi tea shop offer
Published : Oct 6, 2023, 6:47 PM IST
தேனி: போடி இந்திரா காந்தி சிலை அருகே இன்று புதிதாக டீ பாய் என்ற பிரபல தேநீர் கடையின் 2வது கிளை தொடங்கப்பட்டது. தேநீர் கடை புதிதாகத் தொடங்கப்பட்டதை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் தொடக்க நாள் சலுகை வழங்கப்பட்டது. அதாவது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 1 ரூபாய்க்குத் தேநீர் வழங்கப்பட்டது.
போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு டீ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், போடியில் தொடங்கப்பட்ட தேநீர் விடுதியில் முதல் முறையாக அறிமுக சலுகையாக 1 ரூபாய்க்கு டீ விற்கப்பட்டதால், பொதுமக்களும் தேநீர் விரும்பிகளும் அதிக அளவில் கூடி 1 ரூபாய்க்குத் தேநீர் வாங்கி அருந்திச் சென்றனர்.
குறிப்பாக போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேநீர் விரும்பிகளை ஈர்க்கும் விதத்தில் இந்த சலுகை அமைந்துள்ளது. மேலும் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் தேநீர் ஒரு முக்கிய பானமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்; அரசு வழங்கிய பட்டா செல்லாது என கூறியதாக குற்றச்சாட்டு!