தமிழ்நாடு

tamil nadu

வடை பாயசத்துடன் தயாராகும் தடபுடல் விருந்து

ETV Bharat / videos

நெல்லை விரைந்த நடிகர் விஜய்..வடை பாயசத்துடன் தயாராகும் தடபுடல் விருந்து! - vijay

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 1:45 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் வரலாறு காணாத பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகினர்.

பலரது வீடுகளை தண்ணீர் மூழ்கடித்ததால் உடைமைகள் இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகர் மாதா மாளிகையில் நடைபெறும், இந்நிகழ்வில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட சுமார் 1,500 பேருக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்குகிறார். இதில் அரிசி, பருப்பு, சமையல் ஆயில் உட்பட மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண தொகையும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, வெள்ளத்தால் உயிரிழந்த நபர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வரை நடிகர் விஜய் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், நிவாரண உதவி பெற வரும் மக்களின் பசியை ஆற்றுவதற்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ல் மதிய உணவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக மொத்தம் 21 வகையான உணவுகள் சுடச் சுட மக்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

தடபுடல் விருந்து:அதன்படி சாதம், சாம்பார், வத்த குழம்பு, ரசம், மோர், சிறுப்பருப்பு பாயாசம், உளுந்தவடை, அவியல், முட்டைக்கோஸ் பொரியல், தக்காளி பச்சடி, எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, அப்பளம் மோர், வத்தல், ஊறுகாய் கூழ் என நான்கு வகையான கூட்டுகள் மற்றும் நான்கு வகையான குழம்புகள் வழங்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details