தமிழ்நாடு

tamil nadu

விஜயகாந்த் மறைவு

ETV Bharat / videos

பெரியண்ணா விஜயகாந்த்.. உருக்கமாக இரங்கல் தெரிவித்த நடிகர் சூர்யா! - கேப்டன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 9:24 PM IST

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று (டிச.28) காலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நடிகர் சிவக்குமார், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சரத்குமார், திரைப்பட பாடலாசிரியர் அருண்பாரதி, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து என திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன். கடைக்கோடி மக்கள் எல்லோருக்கும் எல்லா உதவிகளைச் செய்த புரட்சிக் கலைஞனாகவும், கேப்டனாக எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தார். 

அவர் இறந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். சூர்யா, விஜயாகாந்த் உடன் பெரியண்ணா என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details