தமிழ்நாடு

tamil nadu

சுந்தர விநாயகர் கோயில் தேர் வெள்ளோட்டம்

ETV Bharat / videos

வேலூர் சுந்தர விநாயகர் கோயில் தேர் வெள்ளோட்டம்.... திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்! - vellore news

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 10:42 AM IST

வேலூர்: வாலாஜாபேட்டையில் சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருத்தேர் பவனி வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றறு தேரினை வடம் பிடித்து இழுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.

வாலாஜாபேட்டையில் மிகப் பழமையான சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. இங்கு மூலவர் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பர்வதவர்தினி சமேத ராமநாதார், மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு என தனித் தனி சன்னதிகள் உள்ளன.

இதற்கிடையே இக்கோயிலுக்கு 20 அடி உயரத்தில் தேர் செய்திட தீர்மாணிக்கபட்டது. இதற்காக பக்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் அடங்கிய திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக தேர் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தேர்க்கான வெள்ளேட்டம் நேற்று (செப். 10) நடைபெற்றது. இந்நிகழ்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டதை தொடங்கி வைத்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கோயில் வளாகத்தில் புதிதாக செய்யப்பட்டுள்ள 20 அடி உயரமுள்ள தேரினை கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கி, முக்கிய வீதிகளின் வழியாக வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details