TN Govt School: ஒரே அறையில் 3 வகுப்புகள்.. மஞ்சநாயக்கனூர் அரசுப் பள்ளி அவலம்! - அன்பில் மகேஷ் பொய்யா மொழி
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மஞ்சநாயக்கனூர் கிராமப்பகுதியில் அரசின் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளை இப்பள்ளியில் படித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, மலைவாழ் மக்கள் தினசரி அவர்கள் குழந்தைகளை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து இந்த அரசுப் பள்ளியில் படிக்க வைக்கின்றனர்.
இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 120 குழந்தைகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். கருங்கல்லால் கட்டப்பட்ட இப்பள்ளி இரண்டு தலைமுறைகளைத் தாண்டி செயல்பட்டு வருகிறது.
கடந்த 2007 ம் ஆண்டு பள்ளியின் மேற்கூரைகள் புனர்பிக்கப்பட்டு உள்ளது, புதிய கட்டிடம் கட்ட பழைய கட்டிடத்தை இடித்து இரண்டு வகுப்பறைகள் கட்ட உள்ளனர், மேலும் இப்பள்ளியில் நான்கு அறைகள் மட்டுமே உள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளி அறையிலும் மூன்று வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது இதனால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் பள்ளியில் முன்புறம் உள்ள சிமெண்ட் தரையில் விளையாடி வருகின்றனர், எனவே தமிழக அரசு மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனைக் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய இடத்தை தேர்வு செய்து, நவீனமயமாகக் கட்டடத்தை கட்டித்தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: தனியாருக்குத் துணைபோகும் அரசு! வெட்டப்படும் நூற்றாண்டு கால பழமையான மரங்கள்