தமிழ்நாடு

tamil nadu

school reopens

ETV Bharat / videos

School reopens: மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளித்த ஆசிரியர்கள் - Poorna kumbam honour

By

Published : Jun 12, 2023, 2:30 PM IST

திருவண்ணாமலை:தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்த நிலையில், பள்ளிகளிளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்து. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் ஜூன் 12-ம் தேதியன்று திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே மாணவ மாணவியர் கோயில்களுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். மேலும் மாணவ மாணவிகள் கடந்த ஆண்டு பயின்ற வகுப்பை விட மேல் வகுப்புக்கு செல்வதாலும், தங்களுடைய நண்பர்களை  சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு சந்திப்பதாலும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒருவருக்கொருவர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். 

அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவியர்களை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று உற்சாகப்படுத்தினர். 

ABOUT THE AUTHOR

...view details