HSC Exam: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு யாகம்! - சரஸ்வதி ஹோமம்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் கோபாலகிருஷணன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காகச் சிறப்பு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் ஞாபகசக்தி அதிகரித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிடச் சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது.பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளின் பெயர் நட்சத்திரம் கூறி அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோபாலகிருஷணன் சுவாமிக்குச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.
இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். யாக பூஜையில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு பென்சில், நோட்டு, பேனா மற்றும் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த யாக பூஜையில் மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: All the Best: +2 மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு!