ஜோலார்பேட்டை அருகே ஆஞ்சநேயருக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.! - Sri Veera Anjaneya
Published : Jan 1, 2024, 12:45 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
மேலும், ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான 500, 200, 100, 50, 20, போன்ற புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 2024 புத்தாண்டை முன்னிட்டு, ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேகம், சிறப்புப் பூஜைகளும், தீப ஆராதனையும், வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில், கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகி ஜி.குமரேசன் மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். கோயிலில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.