தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!

ETV Bharat / videos

அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு அபிஷேகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 7:05 AM IST

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு புரட்டாசி மாத பிரதோஷம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி வரும் 2 தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாத பிரதோஷ தினமான நேற்று (அக்.12) அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால், நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். 

மேலும், நேற்று நடைபெற்ற புரட்டாசி மாத பிரதேஷத்தினை ஏராளமான பக்தர்கள் நேரில் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். 

ABOUT THE AUTHOR

...view details