தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2022, 4:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ETV Bharat / videos

Video: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், மகபூப்நகர் மாவட்டம், ராமச்சந்திராபுரம் மற்றும் சூகுருகட்டா பகுதியிலிருந்து 25 மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்றது. மச்சன்பள்ளி-கோடூர் இடையே உள்ள பாலத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் பேருந்து அதில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பேருந்தில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு, பேருந்தையும் அப்புறப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details