உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா ? சசிகலாவின் பதில் என்ன? - உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா ? சசிகலாவின் பதில் கோயிலுக்கு செல்கிறேன்
திருச்சி: திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வி.கே.சசிகலா திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்விக்கு, இங்கு தான் இருக்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார். உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?' என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்லலாமல், கோயிலுக்கு செல்கிறேன். பின்னர் பதிலளிக்கிறேன்" என தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST