தமிழ்நாடு

tamil nadu

தியாகி கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

ETV Bharat / videos

கக்கன் திரைப்படம்: "இளைய சமுதாயத்துக்கு நல்ல படம்" கக்கனின் பேத்தி நெகிழ்ச்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 11:08 PM IST

சேலம்:இந்திய விடுதலைப் போராட்ட தியாகியும், பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரைவையில் அமைச்சராகப் பதவி வகித்த தியாகி 'கக்கன்' அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இன்று (ஆக.25) தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 'கக்கன்' (Kakkan Movie) திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளுக்கு சென்று இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மாலில் கக்கன் திரைப்படத்தை காண, தியாகி கக்கனின் பேத்தியும் சேலம் சரக காவல்துறை டிஐஜியுமான ராஜேஸ்வரி ஐபிஎஸ் (Rajeshwari IPS) மற்றும் சேலம் காவல்துறையினர் பலரும் இத்திரைப்படத்தை பார்த்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தியாகி கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி ஐபிஎஸ், "கக்கன் திரைப்படம் எனது தாத்தாவின் படம். அவருடைய உண்மையான வாழ்க்கை வரலாறு அப்படியே உருவாக்கப்பட்டுள்ளது" என்று பெருமிதம் கூறினார்.

மேலும் திரைப்படம் நன்றாக உள்ளதாகவும், பாடல்கள் அருமையாக உள்ளதாகவும், அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் திரைப்படமாக வந்துள்ளதாகவும் கூறினார். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் நன்றாக இருப்பதாகவும், முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுடன் தன்னுடைய தாத்தா உள்ள காலங்களை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடரந்து பேசிய அவர், "இந்த திரைப்படத்தை பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் பார்க்கலாம். படத்தை பார்த்தால் அரசியல் குறித்தும், அவரைப் பற்றியும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும். படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியிடும் பொழுதுதான் தமிழக முதலமைச்சரைப் பார்த்தேன். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details