மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் குறித்து தகவல் தரும் ரேஷன் கடைகள்… பொதுமக்கள் ஆர்வம்!! - erode news
ஈரோடு: தமிழ்நாடு அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் நாளை தொடங்குகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் நாளை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இயங்காது எனவும், ரேஷன் கடையில் பொருட்கள் எதுவும் வழங்கப்படாது எனவும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் நான்கு நாட்களில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான முகாம் அமைக்கப்பட்டுள்ள இடம், குறிப்பிட்ட தெருக்கள், மற்றும் வீதிகளைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தேதியில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்கள், ரேஷன் கடைகள் முன்பு உள்ள தகவல் பலகையில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், தங்களுக்கு எந்த தேதியில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள ரேஷன் கடைக்கு ஆவலுடன் சென்று பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Viral video: மரத்தில் ரிலாக்ஸாக காலை வைத்து பலாப்பழம் சாப்பிடும் யானை!