பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1037ஆவது சதய விழாவிற்கு நடப்பட்ட பந்தல்கால் - thanjavur periya kovil
தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்டும் பெருவுடையார் திருக்கோயில், உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாளான ஐப்பசி சதய நட்சத்திர தினத்தில், சதய விழாவாக ஆண்டுதோறும் அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராஜராஜ சோழனின் 1,037ஆவது சதய விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெரிய கோயிலில் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST