தமிழ்நாடு

tamil nadu

பாளையங்கோட்டையில் கொட்டி தீர்த்த கனமழை

ETV Bharat / videos

பாளையங்கோட்டையில் கொட்டி தீர்த்த கனமழை: அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி! - மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 10:41 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று(நவ.17) இரவு தொடங்கிய கனமழை தொடர்ச்சியாக தற்போது வரை இடைவிடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இந்த மழை நீடித்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில், பாளையங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் இன்று(டிச.17) பிற்பகல் முதல் மிகக் கனமழை பெய்தது. குறிப்பாகப் பாளையங்கோட்டை பகுதியில் மாலை 4.30மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சம் 26 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக் உள்ளாகினர். இதையடுத்து கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரேவதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீரை அகற்றியதோடு மழைநீர் மீண்டும் புகாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details