வேலூர் அருகே சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பம்.. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? - tamil news
வேலூர்:சேண்பாக்கம் வ.உ.சி நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியில் வேலூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஒன்றான, பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பொழுது அங்கு பாதாள சாக்கடை பணி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பொழுது, அருகில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியம் மற்றும் மாநகராட்சியில் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை அதனை அதிகாரிகள் எவரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் அந்த மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
எனவே, அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சாய்ந்து கிடக்கும் அந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில் இதுபோன்று அபாயகரமாக, விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:Chennai Airport: பயணிகள் வரத்து குறைவால் சென்னை - மைசூரு - சென்னை விமானங்கள் ரத்து!