கோவையில் தனியார் மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து! - coimbatore Private company Fire accident
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மோட்டார் தயாரிக்கும் கிளை ஒன்றின், பவுண்டரி டிவிசனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கோவை கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இது குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST