தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.479 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்! - Thoothukudi District News
Published : Oct 17, 2023, 4:51 PM IST
தூத்துக்குடி:உலக கடல் சார் இந்தியா உச்சி மாநாடு மும்பையில் தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அப்போது, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 434 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஒன்பதாவது சரக்கு பெட்டகத்தளம், 26 கோடி 70 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஐந்து மெகா வாட் சோலார் பவர் திட்டம், ரூ.18 கோடி 38 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள 2 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மும்பையில் நடைபெறும் உலக கடல் சார் இந்தியா உச்சி மாநாட்டில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 86 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் உட்பட நாடு முழுவதுமுள்ள துறைமுகங்களில் ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு 350-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.