காதலனை கரம்பிடிக்க எதிர்ப்பு - வாட்டர் டேங்கில் ஏறி பெண் போராட்டம்
பிரதாப்கர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில், காதலனை கரம் பிடிக்க குடும்பத்தினர் இடையூறாக இருப்பதாக வாட்டர் டேங்க் மீது ஏறி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பெண்ணும், உறவினர் பையனான தீபக்கும் காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திருமணத்திற்கு தீபக்கின் உறவினர்கள் மறுப்பதாக ராட்சத தண்ணீர் தொட்டி மீது ஏறிய இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி பெண்ணை கீழே இறக்கினர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST