சங்கடஹர சதுர்த்தி விஷேசம் : தேனி ஸ்ரீ சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..! திரளான பக்தர்கள் தரிசனம்! - sankatahara chaturthi
Published : Nov 2, 2023, 7:06 AM IST
தேனி:சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம், பொம்மையகவுண்டன்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 5 அடி உயரத்தில் அமர்ந்திருக்கும் மூலவர் ஶ்ரீ சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், அரிசி மாவு, தேன், இளநீர், பழச்சாறு, குங்குமம், விபூதி, பழங்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சித்தி விநாயகருக்கு வஸ்திரம் கட்டப்பட்டு, வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.