கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவப் பொங்கல் விழா; நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு! - சமத்துவ பொங்கல்
Published : Jan 12, 2024, 12:06 PM IST
தஞ்சாவூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் சார்பில், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வாயிலில் மாக்கோலமிட்டு, விளக்கேற்றி அலங்காரம் செய்து, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினர்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி, புடவையில் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவினை மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி ராதிகா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, கூடுதல் குற்றவியல் நீதிபதி இளவரசி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பொங்கல் பானை வைத்து, பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர். மேலும் நீதித்துறை ஊழியர்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க:அனுமன் ஜெயந்தி: கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்குச் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு!