“உன்ன எப்டி தாங்குவேன் தெரியுமா”.. நிரூபித்துக் காட்டிய நடுப்பட்டி தம்பதி! - நடுப்பட்டி கிராமம்
Published : Jan 17, 2024, 5:35 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சட்டி உடைக்கும் போட்டி, கழுகு மரம் ஏறும் போட்டி, லக்கி கார்னர், கபடி போட்டி, ஓட்டப் பந்தயம் உள்பட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது.
லக்கி கார்னர் என்ற போட்டியில், ஜீவிகா என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் நடைபெற்ற லக்கி கார்னர் போட்டியில் சிறுவர் விமலேஷ் வெற்றி பெற்றார். இதில் கணவர்கள், தங்கள் மனைவியை அதிக நேரமாக தூக்கி வைத்திருக்கும் ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக, இளம் கணவன் மனைவிகள் மகிழ்ச்சியாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாக கடைசிவரை தனது மனைவியை கைவிடாமல் வைத்திருந்த கார்த்தி - சௌடீஸ்வரி தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற கணவனும், மனைவியும் கட்டி அணைத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் அந்த தம்பதியினருக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.