தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூரில் கும்மியடித்து உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய பழங்குடியின மக்கள்

ETV Bharat / videos

திருவள்ளூரில் கும்மியடித்து உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய பழங்குடியின மக்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 10:47 AM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 மேற்பட்ட பழங்குடியினர் கிராமங்களைச் சேர்ந்த 500 மேற்பட்ட மக்கள் ஒன்று திரட்டி எல்லமாகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சி லட்சுமி நகரில் சென்னை கிழக்கு கடற்கரை லயன்ஸ் சங்கம் சார்பில் பொங்கல் விழா இன்று (ஜன.15) நடைபெற்றது. இதற்காக குடியிருப்புகளைச் சுற்றி, மாவிலை, வாழை குருத்தோலை தோரணங்கள் சுற்றி கட்டப்பட்டு, பச்சைக் கம்பளம் விரித்து, பழங்குடியின மக்கள் மேள தாளங்களுடன் பொங்கல் விழாவுக்கு உற்சாகமாக அழைத்து வரப்பட்டனர்.

பாரம்பரிய அடையாளமான மா இலை வாழை குருத்தோலை தோரணங்கள் குடியிருப்புகளில் சுற்றிக் கட்டப்பட்டு பச்சைக் கம்பளம் விரித்து பழங்குடியின மக்கள் மேல தாளங்களுடன் பொங்கல் விழாவுக்கு உற்சாகமாக அழைத்து வரப்பட்டனர். பழங்குடியின பெண்கள் ஒன்றிணைந்து கும்மி அடித்து நடனமாடி மகிழ்ந்தனர். சர்க்கரை பொங்கலிட்டு, பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

அம்மக்களுக்கு போர்வைகள் புத்தாடைகள் உள்ளிட்ட தொகுப்புகள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வழங்கினர். பழங்குடியின மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடிய பொங்கல் விழாவால் அக்கிராமம் விழாக்கோலமாக மாறியது. இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், வி.ஜி.என் சேர்மன் சுரேஷ்பாபு, ஜோன் சேர்மன் மகேஷ்வரன், சென்னை கிழக்கு கடற்கரை லயன்ஸ் சங்க தலைவர் பி.கஜபதி, தொழிலதிபர் சீனிவாசன், இணைந்த கரங்கள் செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details