தமிழ்நாடு

tamil nadu

குடும்பப் பிரச்சனை தொடர்பாக லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

ETV Bharat / videos

காவல் நிலைய செலவு எனக்கூறி ரூ.3000 லஞ்சம்.. சிறப்பு உதவி ஆய்வாளர் அதிரடி கைது! - police station

By

Published : May 14, 2023, 11:40 AM IST

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த கீழ்ப்பாலானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் இவரது மனைவி பரிமளா. குடும்ப பிரச்னை காரணமாக பரிமளா தன் கணவரோடு சண்டை போட்டுக் கொண்டு அவரது அண்ணன் வீட்டுக்கு சென்றார். இது தொடர்பாக பரிமளா, வெற்றிவேலின் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

பரிமளா கொடுத்தப் புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி வெற்றிவேலிடம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி காவல் நிலைய செலவுக்காக 3000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்த சமபவம் குறித்து வெற்றிவேல் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் காவல் நிலையத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரியை கையும் களவுமாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்.. ராசிபுரத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details