சிலிண்டர் பின் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு! - கட்டுவிரியன் பாம்பு
Published : Dec 10, 2023, 7:46 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சாக்கோட்டை பெரியார் நகர்ப் பகுதியில் வசிக்கும் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு காட்டிற்குள் விட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பெரியார் நகரில் வசித்து வரும் சங்கர் என்பவரது வீட்டிற்குள் இன்று காலை திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பாம்பு ஒன்று புகுந்தது.
அந்த பாம்பு வீட்டின் சமையலறையிலிருந்த எரிவாயு சிலிண்டரின் பின்புறம் மறைவாகப் பதுங்கி இருந்துள்ளது. இதனால், பதற்றமடைந்த குடும்பத்தினர் இது குறித்து கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிலிண்டரின் பின் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை லாவகமாகப் பிடித்து பத்திரமாக மீட்டனர். பின் அதைப் பெரிய காலி கேனில் அடைத்துக் காப்புக் காட்டிற்குள் விட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் வீட்டிற்குள் நுழைந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
மழைக்காலம் என்பதால் பாம்பு வீட்டிற்கு வரும் சம்பவம் அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.