திருச்சி கே.கே. நகரை கலைஞர் கருணாநிதி நகர் என குறிப்பிட வேண்டி முதலமைச்சரிடம் மனு!!
திருச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் புறப்பட்டு சென்றார். திருச்சி விமான நிலையத்தில் வந்த முதலமைச்சரை திருச்சி கே.கே. நகர் பகுதி முன்னாள் திமுக அவைத்தலைவரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான, சுப்ரமணியன் (74) சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.
மனுவில் கே.கே. நகர் என்பதை கலைஞர் கருணாநிதி நகர் என முழுமையாக குறிப்பிட வேண்டும். மேலும்
கே.கே.நகரில் ஏழைகள் முதியோர்கள் அதிகம் வசிப்பதால் அப்பகுதியில் உடனடியாக மருத்துவமனை கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் மனு வழங்கினார்.