தமிழ்நாடு

tamil nadu

குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் ஆத்திரம்-மருமகன் வெறிச்செயல்

ETV Bharat / videos

குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் ஆத்திரம்.. மாமியார், மைத்துனரை தாக்கிய மருமகன் - வீடியோ வைரல்! - cuddalore news in tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 10:15 AM IST

Updated : Sep 7, 2023, 10:39 AM IST

கடலூர்:சென்னை நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றி வருபவர் சுமன்ராஜ். இவருக்கும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சுனாமி நகரை சேர்ந்த வினோதினி என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கு வயதிலும், இரண்டு வயதிலும் ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி சுனாமி நகரில் உள்ள தன்னுடைய தாய் வாசுகி வீட்டிற்கு வினோதினி வந்து உள்ளார். இதனையடுத்து வாசுகி வீட்டிற்கு வந்த சுமன்ராஜ் தன்னுடைய மனைவியை குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு கேட்டடுள்ளார். 

ஆனால் வினோதினி அவருடன் செல்ல மறுத்த நிலையில் வாசுகி மற்றும் அவரது மகன் வெங்கடேசன் வினோதினியை அனுப்ப முடியாது என கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுமன்ராஜ், வாசுகி மற்றும் வெங்கடேசன் இடம் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கி உள்ளார். 

இந்த தாக்குதலில் நிலைகுலைந்த இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கதினர் அவர்கள் இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமன்ராஜ் கட்டையால் தாக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Last Updated : Sep 7, 2023, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details